Monday, January 3, 2011

ஒப்பீடு வலைப்பூவில் இணைய விருப்பமா ?

வணக்கம் வலைத்தமிழர்களே. முந்தைய பதிவின் சுட்டியை படித்துவிட்டீர்கள் என்றால் இந்த வலைப்பூவின் நோக்கம் முழுமையாக தெரிந்துபோகும்.

ஒப்பீடு வலைப்பூ என்பது பல்வேறு பொருட்களை / சேவைகளை ஒப்பிடப்போகிறது. ஆனால், ஒரு சேவையை அல்லது பொருளை, கண்ணால் கூட பார்க்காமல் / பயன்படுத்தி பார்க்காமல் அதனை மற்றொன்றோடு ஒப்பிட முடியாது.

அப்படி செய்தால் அது அந்த சேவைக்கு / பொருளை தயாரிக்கும் நிறுவனத்துக்கு பெரும் இழப்பாகும். அவ்வாறான தவறும் இவ்வலைப்பூவில் நிகழ அனுமதியோம்.

ஆகவே, நிறைய வாசகர்களின் / வலைத்தோழர்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே சிறப்பான பல ஒப்பீட்டு பதிவுகளை இடமுடியும்.

நீங்கள் பங்களிக்க விரும்பினால், கூகிள் வழங்கும் சேவையை பயன்படுத்தி இன்வைட் அனுப்புகிறேன். இணைந்துகொள்ளுங்கள். நமக்கான கூகிள் குழுமம் ஒன்றையும் உருவாக்கி, விவாதித்து, சிறந்த பதிவுகள் இடலாம்.

ரெடியா ?

Sunday, January 2, 2011

ஒப்பீடு வலைப்பூ ஏன் ?

நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். ஒரு பொருளை வாங்குதற்கு முன் பல முறை யோசிக்கிறோம். அந்த பொருளின் விலை, நம்முடைய பட்ஜெட், நமக்கு அந்த பொருள் அல்லது சேவை உண்மையிலேயே அவசியமான ஒன்றா ? போன்றவை அவற்றில் சில.

அப்படி பல விஷயங்களை யோசித்தாலும், அந்த பொருளை வாங்கி உபயோகப்படுத்தினால் தான் அதன் உண்மையான தரம் தெரியவரும். சிலர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு அந்த பொருளை பற்றி பலரிடம் விசாரிப்பார்கள். அந்த பொருளை தயாரிக்கும் நிறுவனம் பற்றி, அந்த குறிப்பிட்ட பொருளைப்பற்றி இணையத்தில் கிடைக்கும் ரிவ்யூக்களை வாசிப்பார்கள். (பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும்).

இந்த ரிவ்யூக்களை தமிழில் வழங்குவதுதான் திட்டம். அதே நேரம் இதுபோன்ற நேரடியான ரிவ்யூக்களை ( எல்ஜி / சாம்சங் / வீடியோகான், எந்த வாஷிங் மெஷின் சிறந்தது ) வெகுஜன ஊடகங்களால் நேரடியாக வெளியிடுவது கொஞ்சம் கடினமே. காரணம் இது அந்த பொருளின் மார்க்கெட்டை நேரடியாக பாதிக்கும் விஷயம். வெகுஜன ஊடகத்தில் இது பற்றிய ரிவ்யூ வேண்டுமானால் வெளியிடலாம், ஆனால் அதில் எது சிறந்தது என்று எழுதினால் எழுதியவரை நோக்கி ஆட்டோ அனுப்பபடலாம். ஆனால் ஒரு வாடிக்கையாளராக நமக்கு மிகவும் தேவையான விஷயம் இது.

எல்.ஜி, சாம்சங், வீடியோகான், வாஷிங் மெஷின் என்றால் அதில் எதை வாங்கலாம் என்று நச்சென்று சொல்லப்போகும் வலைப்பூ இது. உங்கள் முடிவு செய்யும் திறனுடன் ஒரு வேல்யூ அடிஷனாக, டெக்னிக்கலாக எது பெஸ்ட் என்று தடாலடியாக சொல்லப்போகும் வலைப்பூ இது.

பொருட்களில் பல பிரிவுகள் உண்டு. வாஷிங் மெஷின் என்றால் டாப் லோடிங் பாட்டம் லோடிங், மொபைல் என்றால் லோ எண்ட், ஹை எண்ட், ஸ்மார்ட். போன், சேவை துறை என்றால் (உதா. விமான டிக்கெட் புக்கிங்) மேக் மை ட்ரிப் , யாத்ரா, க்ளியர் ட்ரிப்) என்ற எதில் சரியான சேவை, இண்டர் நெட் கனெக்ஷன் என்றால் டாட்டா போட்டான், ரிலையன்ஸ் ப்ராட் பேண்ட், வோடாபோன், பிஎஸ் எண் எல் எது சிறந்தது என்று பிரித்து மேயப்போகிறோம்.

குமுதம், ஆவி, குங்குமம், புதிய தலைமுறை எதை வாங்கலாம் ? தமிழில் தினகரன் தினமலர் தினத்தந்தி எந்த வார இதழ் பெஸ்ட் ? ஆங்கிலத்தில் ? நாக்குரியா மான்ஸ்டரா டைம்ஸ் ஜாப்ஸா ? ஷாதியா தமிழ்மேட்ரிமோனியா ? என்று வெளுத்து வாங்கப்போகிறோம்.

படத்தை பற்றிய விமர்சனம் எழுதுபவர்கள் கடைசிவரை படத்தை பார்க்கலாமா இல்லையா என்று சொல்லவே இல்லை என்றால் எப்படிப்பட்ட வெறி வரும் ?  அந்த நிலை இந்த வலைப்பூவில் இராது. கூடியவரை நேர்மையாகவும், அதே நேரம் வழவழ கொழகொழ என்று நடுநிலைவாதம் பேசாமல் நச்சென்றும் இந்த ஒப்பீடுகள் இருக்கும். கடைசிவரை விவாதித்துவிட்டு இதுவும் நல்லாருக்கு அதுவும் நல்லாருக்கு என்று உங்கள் நேரத்தை வீணடிக்கமாட்டோம். அந்த பிரிவில் எது பெஸ்ட் என்று அதிரடியான முடிவு தரும் பதிவுகளாக இருக்கும்.

இந்த முயற்சியில் பல கைகள் தடதடவெட தட்டினால் தான் ஓசை அருமையாக இருக்கும். காரணம், எல்.சி.டி டிவி என்றால் ஒருவர் வீட்டில் சாம்சங் இருக்கும். இன்னொருவர் வீட்டில் சான்ஸுயி இருக்கும். ஒருவர் பிஎஸ் என் எல் ப்ராட்பேண்ட் வைத்திருப்பார். இன்னொருவர் டாட்டா. ஆகவே இருவரின் இன்புட்டும் தேவை. ஆகவே நிறையபேரின் பங்களிப்போடு, கருத்துக்களும் தேவை. உங்கள் நல்லாதரவை வேண்டி !!